சனி, 11 ஏப்ரல், 2009

அம்மா

50 பவுன் நகை போட்டு விடுங்கள்,பத்து லட்சம் ரொக்கமாக கொடுத்து விடுங்கள் எல்லாம் உங்கள் மகள் தானே வைத்து கொள்ள போகிறாள் என்றாள் அம்மா,திடுக்கென்று தூக்கிவாரிப் போட்டது எனக்கு என்னிடம் உன் வாழ்க்கை தான் முக்கியம் எனக்கு பணம் முக்கியம் இல்லை அதனால் தான் நீ காதலித்த பெண்ணையே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்றாளே,இப்பொழுது பெண் வீட்டில் என்னை பற்றி என்ன நினைப்பார்கள்,அம்மா இதை நான் உன்னிடம் எதிர்பார்க்கவில்லை அம்மா ஏன் அம்மா என்னை ஏமாற்றினாய் என்று மனதில் நினைத்து கொண்டேன்.

பெண் வீட்டில் மதியம் உணவருந்தி விட்டு அப்போ நாங்கள் போய்ட்டு வருகிறோம் என்று அவர்களிடம் விடை பெற்று கொண்டு நாங்கள் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டு இருந்தோம்,நான் ஏன் அம்மா இப்படி செய்தாய் என்று ஆரம்பித்தேன் அப்பொழுது என் வருங்கால மனைவி என் காதலி எங்களை நோக்கி ஓடி வந்தாள்,அத்தை நன்றி அத்தை ரொம்ப நன்றி அத்தை என்றாள்.எனக்கு ஒன்றுமே புரியவில்லை,அம்மா ஆரம்பித்தாள் டேய் வரதட்சணை வாங்க கூடாது என்பது தான் என் குறிக்கோள்,ஆனால் உன் வருங்கால மாமனாரோ தன் மகன் கல்யாணத்திற்காக நிறைய வாங்கி இருக்கிறார்,அது மட்டுமில்லாமல் இப்பொழுது உன் மச்சினன் வேலை இல்லாமல் குடும்பம் நடத்தவே கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்,ஆனால் உன் மாமனாரோ ஒரு சல்லி காசு கூட கொடுக்க மாட்டேன் என்று கூறி விட்டார்,என் மருமகளுக்கோ தன் அண்ணன் கஷ்டப்படுவதை பார்க்க பிடிக்கவில்லை,அதனால் தான் என் மருமகள் கேட்டு கொண்டதற்கு இணங்க நான் வரதட்சணை கேட்டேன்.
சாரிம்மா உன்னை தப்பாக நினைத்து விட்டேன் என்னை மன்னித்து விடு என்றேன் நான்.