50 பவுன் நகை போட்டு விடுங்கள்,பத்து லட்சம் ரொக்கமாக கொடுத்து விடுங்கள் எல்லாம் உங்கள் மகள் தானே வைத்து கொள்ள போகிறாள் என்றாள் அம்மா,திடுக்கென்று தூக்கிவாரிப் போட்டது எனக்கு என்னிடம் உன் வாழ்க்கை தான் முக்கியம் எனக்கு பணம் முக்கியம் இல்லை அதனால் தான் நீ காதலித்த பெண்ணையே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்றாளே,இப்பொழுது பெண் வீட்டில் என்னை பற்றி என்ன நினைப்பார்கள்,அம்மா இதை நான் உன்னிடம் எதிர்பார்க்கவில்லை அம்மா ஏன் அம்மா என்னை ஏமாற்றினாய் என்று மனதில் நினைத்து கொண்டேன்.
பெண் வீட்டில் மதியம் உணவருந்தி விட்டு அப்போ நாங்கள் போய்ட்டு வருகிறோம் என்று அவர்களிடம் விடை பெற்று கொண்டு நாங்கள் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டு இருந்தோம்,நான் ஏன் அம்மா இப்படி செய்தாய் என்று ஆரம்பித்தேன் அப்பொழுது என் வருங்கால மனைவி என் காதலி எங்களை நோக்கி ஓடி வந்தாள்,அத்தை நன்றி அத்தை ரொம்ப நன்றி அத்தை என்றாள்.எனக்கு ஒன்றுமே புரியவில்லை,அம்மா ஆரம்பித்தாள் டேய் வரதட்சணை வாங்க கூடாது என்பது தான் என் குறிக்கோள்,ஆனால் உன் வருங்கால மாமனாரோ தன் மகன் கல்யாணத்திற்காக நிறைய வாங்கி இருக்கிறார்,அது மட்டுமில்லாமல் இப்பொழுது உன் மச்சினன் வேலை இல்லாமல் குடும்பம் நடத்தவே கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்,ஆனால் உன் மாமனாரோ ஒரு சல்லி காசு கூட கொடுக்க மாட்டேன் என்று கூறி விட்டார்,என் மருமகளுக்கோ தன் அண்ணன் கஷ்டப்படுவதை பார்க்க பிடிக்கவில்லை,அதனால் தான் என் மருமகள் கேட்டு கொண்டதற்கு இணங்க நான் வரதட்சணை கேட்டேன்.
சாரிம்மா உன்னை தப்பாக நினைத்து விட்டேன் என்னை மன்னித்து விடு என்றேன் நான்.
சனி, 11 ஏப்ரல், 2009
புதன், 18 மார்ச், 2009
அறிவு
குட்மார்னிங் சார் என்ற பியூனுக்கு மார்னிங் என்று விட்டு எத்தனை பேர் நேர்காணலுக்கு வந்து இருக்கிறார்கள் என்றான் கோபி,இரண்டு பேர் சார் என்றான் பியூன்,இரண்டு பேரையும் தனித்தனியாக அழைத்து ஒரு கம்பெனிக்கு தாங்கள் ப்ராஜக்ட் கொடுக்க போவதாகவும் அந்த கம்பெனியைப் பற்றி விசாரித்து வரவும் கூறினான்,இன்று ஒரு நாள் உங்களுக்கு அவகாசம் என்றான்.நேர்காணலுக்கு வந்த குமார் மற்றும் ராஜா இருவரும் நண்பர்கள்.இருவரும் மாலை தங்கள் ரிபோர்டை கோபியிடம் ஒப்படைத்தனர்.குமாருக்கு வேலை கிடைத்தது,ராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை இருவரும் தானே சென்றோம்,விசாரித்தோம் இத்தனைக்கும் நான் தானே அந்த மானேஜரிடம் அவர்கள் கம்பெனியைப் பற்றிய அத்தனை விபரங்களையும் விசாரித்தேன் குமாரோ உள்ளே வரவே இல்லையே.சரி குமாரிடமே கேட்டு விடலாம் என்று கேட்டான்.
குமார் கூறினான்,நீ அந்த கம்பெனி மானேஜிரடம் சென்று விசாரித்து கொண்டு இருந்த போது நான் அவ்வழியே சென்ற பியூனை மடக்கினேன்,அவனிடம் மெல்ல மெல்ல இந்த கம்பெனி யாருடையது,நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டேன்,அவனும் இது இன்னாருடையது நான் இங்கே பியூனாக வேலை பார்க்கிறேன் என்றான்.
பின்னர் நான் அவனிடம் இந்த காலத்தில் குடும்பம் நடத்துவது கஷ்டம் ஆயிற்றே உங்கள் கம்பெனி கொடுக்கும் சம்பளம் போதுமானதாக உள்ளதா என்றேன்,கம்பெனியைப் பற்றி தான் நான் விசாரிக்கிறேன் என்று தெரியாமல்,எங்கே சார் பிசாத்து சம்பளம் தருகிறார்கள்,கம்பெனியிடம் பணம் இல்லை ,இருக்கும் ப்ராஜக்ட்களையே முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்றான்.நான் அதை அப்படியே ரிபோர்டாக எழுதிக் கொடுத்தேன்,நீ அந்த கம்பெனி மேலதிகாரிகளிடம் விசாரித்தாய் அவர்களும் நீ ப்ராஜக்ட் கொடுப்பாய் என்று அவர்களும் அவர்கள் கம்பெனி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தனர்,நாங்கள் இத்தனை ப்ராஜக்ட் செய்திருக்கிறோம் என்று லிஸ்ட் கொடுத்தனர் நீ அதை வைத்து ரிபோர்ட் செய்தாய்.ராஜாவுக்கு புரிந்தது,கங்கிராட்ஸ் குமார் என்றான்.

சனி, 7 மார்ச், 2009
பெண்ணின் கனவு -1
மென்பொறியாளராக பணி புரியும் சாதனா,குழப்பமான மனநிலையில் இருந்தாள்.அவளது குழப்பத்திற்கு காரணம் அவள் வீட்டில் நடைபெறும் அவளது திருமண பேச்சு.
சிறுவயது முதல் அவளுக்கு இந்த குழப்பம் இருந்து வந்தது.திருமணத்திற்கு பின் தனது வேலையை தொடர்வதா இல்லையா என்பது தான் அது.திருமணத்திற்கு பின் தான் வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும்,தான் ஒரு நல்ல மனைவியாக,நல்ல தாயாக இருக்க வேண்டும் என்பதே அவளது விருப்பம்.ஆனால் இந்த காலத்தில்,படித்து வேலைக்கு செல்லும் பெண்களையே திருமணம் செய்ய விரும்பும் ஆண்களே பலர்.ஆதலால் தனது விருப்பத்தை தனக்கு பார்த்திருக்கும் பையன் ரகுவிடம் கூற நினைத்தாள்.
ரகுவும் இதற்கு சம்மதிக்கவே, இருவருக்கும் இனிதே திருமணம் முடிந்தது.சாதனாவும் நிறைந்த மனதுடன் அமெரிக்காவில் மென்பொறியாளராக பணிபுரியும் ரகுவுடன் பல கனவுகளுடன் சென்றாள்.
சாதனாவின் கனவுகள் நிறைவேறியதா? ரகு தான் சொன்னபடி செய்தானா?
தொடரும்....

வெள்ளி, 6 மார்ச், 2009
என்னை பற்றி
என் பெயர் முத்தையா, நான் ஒரு கட்டிட கலை பொறியாளர்.துபாயில் பணிபுரிகிறேன்.சமீப காலமாக எழுத்தில் ஆர்வம் கூடியுள்ளது.என் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயங்களை எழுத்தில் கொண்டு வர முயற்சி செய்துள்ளேன்,படித்து விட்டு உங்களுடைய மேலான கருத்துக்களை கூறுங்கள்.
திருக்குறளின் பால்கள்
என் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது நானும் என் ஜுனியரும் ஒரு வினாடி வினா போட்டிக்கு சென்று இருந்தோம்.அங்கே ஒரு கேள்வி கேட்டார்கள்.
"திருக்குறளின் பால்கள் என்ன என்ன?"
என் ஜுனியரோ, 'என்னை அவசரப்படாதே இரு' என்பதற்குள்,
நான் எழுந்து திருக்குறளின் பால்கள்,
ஆண் பால்,
பெண் பால்,
பலவின் பால் என்றேன்.
என் ஜுனியரோ தலையில் அடித்து கொண்டான்.என்னை சுற்றி இருந்த அனைத்து பள்ளி மாணவர்களும் சிரித்தனர்.அப்பொழுதும் எதற்கு சிரிக்கிறார்கள் என்று தெரியாமல் நான் முழித்துக் கொண்டிருந்தேன்.
என் ஜுனியர் என்னிடம் கூறினான் அண்ணா அது "அறத்துப்பால்,காமத்துப்பால்,பொருட்பால்" நான் இரு என்று கூறிக்கொண்டிருக்கும் பொழுதே அவசரப்பட்டுவிட்டீர்களே,உங்களாலே 10 மதிப்பெண்கள் போய் விட்டதே என்றான்.
நான் ஹி...ஹி...ஹி என்று அசடு வழிந்தேன்.

புதன், 4 மார்ச், 2009
முதல் காதல்
சுதா.பார்த்தாலே எல்லோரையும் கவரக் கூடிய வசீகரமான முகம், அழகிய பேச்சு.பள்ளியில் 12 ம் வகுப்பு படிப்பவள்.நானும் அவளும் ஒரே டியுஷனில் தான் படித்தோம்.
எனக்கும் சுதாவுக்கும் நட்பு மலர்ந்தது.நானும் அவளும் ஒரே அரசு பேருந்தில் பள்ளிக்கு தினமும் சென்று வந்தோம். என் பள்ளியும் அவள் பள்ளியும் ஒரு கிலோமீட்டர் இடைவெளீயில் உள்ளன.தினமும் அவள் பள்ளியில் அவளை விட்டுவிட்டு என் பள்ளிக்கு நான் போவேன்.நாட்கள் நகர்ந்தன.நானும் சுதாவும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்.
எனக்கு அவள் மேல் காதல் வந்தது.என் காதலை அவளுக்கு எப்படி புரிய வைப்பது என நான் என் மூளையை கசக்கி கொண்டிருந்த போது,சுதா என்னை டியூஷன் முடிந்தவுடன் தனியாக சந்திக்க வேண்டுமென்றாள்.என் மனம் துள்ளியது.
'பழம் நழுவி பாலில் விழுந்தது போல்' அவளே சந்திக்க வேண்டும் என்கிறாளே என்று.
என் மனதில் தோன்றியவற்றை எல்லாம் ஒரு மடலாக வரைந்து அவளிடம் கொடுக்க முடிவு செய்தேன்.உடனே அதை எழுதவும் ஆரம்பித்தேன்.டியூஷன் முடிந்தது.நானும் அவளும் யாரும் இல்லாத பூங்காவிற்க்கு சென்றோம்.அவளே ஆரம்பித்தாள்.
மகேஷ்,எனக்கு எப்படி சொல்றதுனு தெரியலை.சொல்லாமலும் இருக்க முடியவில்லை.
"சொல்ல வந்ததை சொல்லடி கள்ளி" என நினைத்தேன் நான்.
"அது வந்து ... அது வந்து" என்று தயங்கி ஒரு கடிதத்தை நீட்டினாள் தலையை குனிந்தவாறு.
"சக்சஸ்" மனதில் நினைத்து கொண்டு,அவள் கடிதத்தை படித்து விட்டு என் கடிதத்தை கொடுக்கலாம் என்று முடிவு செய்து,அவள் கடிதத்தை பிரித்தேன்.
அவள் இரத்ததில் எழுதி இருந்தாள்
"அன்புள்ள கார்த்திக்,நான் உங்களை 2 வருடமாக உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்.அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் உங்கள் நண்பரிடம் இந்த கடிதத்தை கொடுக்கிறேன்.நீங்களும் என்னை விரும்புகிறீர்களா இல்லையா என்று சொல்லுங்கள்.
-இப்படிக்கு சுதா."
எனக்கு தலை சுற்றியது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)