குட்மார்னிங் சார் என்ற பியூனுக்கு மார்னிங் என்று விட்டு எத்தனை பேர் நேர்காணலுக்கு வந்து இருக்கிறார்கள் என்றான் கோபி,இரண்டு பேர் சார் என்றான் பியூன்,இரண்டு பேரையும் தனித்தனியாக அழைத்து ஒரு கம்பெனிக்கு தாங்கள் ப்ராஜக்ட் கொடுக்க போவதாகவும் அந்த கம்பெனியைப் பற்றி விசாரித்து வரவும் கூறினான்,இன்று ஒரு நாள் உங்களுக்கு அவகாசம் என்றான்.நேர்காணலுக்கு வந்த குமார் மற்றும் ராஜா இருவரும் நண்பர்கள்.இருவரும் மாலை தங்கள் ரிபோர்டை கோபியிடம் ஒப்படைத்தனர்.குமாருக்கு வேலை கிடைத்தது,ராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை இருவரும் தானே சென்றோம்,விசாரித்தோம் இத்தனைக்கும் நான் தானே அந்த மானேஜரிடம் அவர்கள் கம்பெனியைப் பற்றிய அத்தனை விபரங்களையும் விசாரித்தேன் குமாரோ உள்ளே வரவே இல்லையே.சரி குமாரிடமே கேட்டு விடலாம் என்று கேட்டான்.
குமார் கூறினான்,நீ அந்த கம்பெனி மானேஜிரடம் சென்று விசாரித்து கொண்டு இருந்த போது நான் அவ்வழியே சென்ற பியூனை மடக்கினேன்,அவனிடம் மெல்ல மெல்ல இந்த கம்பெனி யாருடையது,நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டேன்,அவனும் இது இன்னாருடையது நான் இங்கே பியூனாக வேலை பார்க்கிறேன் என்றான்.
பின்னர் நான் அவனிடம் இந்த காலத்தில் குடும்பம் நடத்துவது கஷ்டம் ஆயிற்றே உங்கள் கம்பெனி கொடுக்கும் சம்பளம் போதுமானதாக உள்ளதா என்றேன்,கம்பெனியைப் பற்றி தான் நான் விசாரிக்கிறேன் என்று தெரியாமல்,எங்கே சார் பிசாத்து சம்பளம் தருகிறார்கள்,கம்பெனியிடம் பணம் இல்லை ,இருக்கும் ப்ராஜக்ட்களையே முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்றான்.நான் அதை அப்படியே ரிபோர்டாக எழுதிக் கொடுத்தேன்,நீ அந்த கம்பெனி மேலதிகாரிகளிடம் விசாரித்தாய் அவர்களும் நீ ப்ராஜக்ட் கொடுப்பாய் என்று அவர்களும் அவர்கள் கம்பெனி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தனர்,நாங்கள் இத்தனை ப்ராஜக்ட் செய்திருக்கிறோம் என்று லிஸ்ட் கொடுத்தனர் நீ அதை வைத்து ரிபோர்ட் செய்தாய்.ராஜாவுக்கு புரிந்தது,கங்கிராட்ஸ் குமார் என்றான்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
test
பதிலளிநீக்கு