வெள்ளி, 6 மார்ச், 2009

திருக்குறளின் பால்கள்

என் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது நானும் என் ஜுனியரும் ஒரு வினாடி வினா போட்டிக்கு சென்று இருந்தோம்.அங்கே ஒரு கேள்வி கேட்டார்கள்.

"திருக்குறளின் பால்கள் என்ன என்ன?"

என் ஜுனியரோ, 'என்னை அவசரப்படாதே இரு' என்பதற்குள்,
நான் எழுந்து திருக்குறளின் பால்கள்,

ஆண் பால்,
பெண் பால்,
பலவின் பால் என்றேன்.

என் ஜுனியரோ தலையில் அடித்து கொண்டான்.என்னை சுற்றி இருந்த அனைத்து பள்ளி மாணவர்களும் சிரித்தனர்.அப்பொழுதும் எதற்கு சிரிக்கிறார்கள் என்று தெரியாமல் நான் முழித்துக் கொண்டிருந்தேன்.

என் ஜுனியர் என்னிடம் கூறினான் அண்ணா அது "அறத்துப்பால்,காமத்துப்பால்,பொருட்பால்" நான் இரு என்று கூறிக்கொண்டிருக்கும் பொழுதே அவசரப்பட்டுவிட்டீர்களே,உங்களாலே 10 மதிப்பெண்கள் போய் விட்டதே என்றான்.

நான் ஹி...ஹி...ஹி என்று அசடு வழிந்தேன்.

1 கருத்து:

  1. நல்ல வேளை... ஆவின் பால்,ஆரோக்கியா பால், சேவா பால்னு சொல்லாம விட்டிங்களே....

    பதிலளிநீக்கு