புதன், 4 மார்ச், 2009

முதல் காதல்

சுதா.பார்த்தாலே எல்லோரையும் கவரக் கூடிய வசீகரமான முகம், அழகிய பேச்சு.பள்ளியில் 12 ம் வகுப்பு படிப்பவள்.நானும் அவளும் ஒரே டியுஷனில் தான் படித்தோம்.

எனக்கும் சுதாவுக்கும் நட்பு மலர்ந்தது.நானும் அவளும் ஒரே அரசு பேருந்தில் பள்ளிக்கு தினமும் சென்று வந்தோம். என் பள்ளியும் அவள் பள்ளியும் ஒரு கிலோமீட்டர் இடைவெளீயில் உள்ளன.தினமும் அவள் பள்ளியில் அவளை விட்டுவிட்டு என் பள்ளிக்கு நான் போவேன்.நாட்கள் நகர்ந்தன.நானும் சுதாவும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்.

எனக்கு அவள் மேல் காதல் வந்தது.என் காதலை அவளுக்கு எப்படி புரிய வைப்பது என நான் என் மூளையை கசக்கி கொண்டிருந்த போது,சுதா என்னை டியூஷன் முடிந்தவுடன் தனியாக சந்திக்க வேண்டுமென்றாள்.என் மனம் துள்ளியது.
'பழம் நழுவி பாலில் விழுந்தது போல்' அவளே சந்திக்க வேண்டும் என்கிறாளே என்று.

என் மனதில் தோன்றியவற்றை எல்லாம் ஒரு மடலாக வரைந்து அவளிடம் கொடுக்க முடிவு செய்தேன்.உடனே அதை எழுதவும் ஆரம்பித்தேன்.டியூஷன் முடிந்தது.நானும் அவளும் யாரும் இல்லாத பூங்காவிற்க்கு சென்றோம்.அவளே ஆரம்பித்தாள்.

மகேஷ்,எனக்கு எப்படி சொல்றதுனு தெரியலை.சொல்லாமலும் இருக்க முடியவில்லை.

"சொல்ல வந்ததை சொல்லடி கள்ளி" என நினைத்தேன் நான்.

"அது வந்து ... அது வந்து" என்று தயங்கி ஒரு கடிதத்தை நீட்டினாள் தலையை குனிந்தவாறு.

"சக்சஸ்" மனதில் நினைத்து கொண்டு,அவள் கடிதத்தை படித்து விட்டு என் கடிதத்தை கொடுக்கலாம் என்று முடிவு செய்து,அவள் கடிதத்தை பிரித்தேன்.

அவள் இரத்ததில் எழுதி இருந்தாள்

"அன்புள்ள கார்த்திக்,நான் உங்களை 2 வருடமாக உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்.அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் உங்கள் நண்பரிடம் இந்த கடிதத்தை கொடுக்கிறேன்.நீங்களும் என்னை விரும்புகிறீர்களா இல்லையா என்று சொல்லுங்கள்.
-இப்படிக்கு சுதா."

எனக்கு தலை சுற்றியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக